செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 6 நவம்பர் 2023 (13:15 IST)

உரிமையாளரை திட்டிய பெண்ணை கடித்த நாய்!

dogs
டெல்லியில் உரிமையாளரை திட்டிய பெண்ணை நாய் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் ஆடு, மாடு,  நாய், பூனை உள்ளிட்ட பிராணிகளை வளர்ப்பதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சில நேரங்களில் இவை செய்யும் குறும்புகள்செயல்கள் எல்லாம் அவற்றை வளர்ப்பவர்களுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஆனால் மற்றவர்களுக்கு சில நேரங்களிலும் தொந்தரவாகவே அமையும். அதேபோல்,  உரிமையாளர்களுக்கு எதாவது ஒன்று என்றால் செல்லபிராணிகள் தாக்குவதை பல செய்திகளில் படித்திருக்கிறோம். 

அந்த வகையில் டெல்லியில் உள்ள ஒரு பகுதியில் வசிக்கும் பெண் ரியா தேவி. இவர் தன் வீட்டிற்கு அருகில் வசித்து வரும்  பெண் ஒருவர் நாயை வளர்த்து வரும் நிலையில், உங்கள் நாயை என் வீட்டின் முன்பு அசுத்தம் செய்ய விடாதீர்கள் என கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில்,  அந்த நாய்  ரியாதேவியை கடித்துள்ளது. அந்த  நாயை உரிமையாளர் ஏவி கடிக்க வைத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ரியாதேவி புகார் அளித்த நிலையில் நாயின் உரிமையாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.