துடிதுடித்த தலித் சிறுமி; குடும்பத்தார் கண் முன்னர் நடந்த கொடூர பலாத்காரம்!

Last Modified புதன், 12 ஜூன் 2019 (11:22 IST)
உத்திரபிரதேச மாநிலத்தில் கழிவுநீர் கால்வாய் கட்டுவதற்கு ஏற்பட்ட தகறாரில் சிறுமி இருவர் 6 பேரால் பலாத்காரம் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
உத்திரபிரதேச மாநிலம் குஷி நகர் மாவட்டத்தில் உள்ள கோரக்பூரில் வசித்து வந்த சிறுமியின் குடும்பம் கழிவுநீர் கால்வாய் கட்டுவதற்கு முடிவு செய்தனர். ஆனால், இதை பக்கத்து வீட்டுக்காரர்கள் எதிர்க்கவே சண்டை ஏற்பட்டுள்ளது. 
 
இதனால், மாலை நேரத்தில் வீட்டில் இருந்த சிறுமியை இழுத்துக்கொண்டு போய் குடும்பத்தினர் கண் முன்னிலையிலேயே அந்த பக்கத்து வீட்டை சேர்ந்த 6 பேர் கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளனர். 
 
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீஸார் 4 பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவான இரண்டு பேரை தேடி வருகின்றனர். கொடூரமாக பாலத்காரம் செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உடபடுத்தப்பட்டுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :