1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 2 பிப்ரவரி 2022 (11:51 IST)

இந்திய அரசு அங்கீகரிக்காத பிட்காயின் வருமானத்திற்கு வரியா? ஒரு விளக்கம்

பிட்காயின் என்ற கிரிப்டோகரன்சியை இந்திய அரசு இன்னும் அங்கீகரிக்கவில்லை என்றாலும் அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 30 சதவீதம் வரி என நேற்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த நிலையில் இது குறித்து சமூக வலைதளங்களில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கிரிப்டோகரன்ஸி என்ற பிட்காயின் என்பது சட்டப்பூர்வமானது அல்ல. இந்தியாவில் வரவு செலவுகளுக்கு பிட்காயின் என்ற கிரிப்டோகரன்சி பணத்தை சட்டபூர்வமாக உபயோகிக்க முடியாது.  மேலும் பிட்காயின் பண பரிவர்த்தனையில் உருவாகும் சிக்கல்களுக்கும் குற்றங்களுக்கும் சட்டப்பாதுகாப்பு கிடைக்காது
 
ஆனால் அதே நேரத்தில் பிட்காயினில் முதலீடு செய்ய இந்திய அரசு தடை விதிக்க வில்லை/ எனவே எந்த ஒரு வருவாய்க்கும் வருமான வரி விதிப்பது போலவே பிட்காயினுக்கும் வருமான வரி விதிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டு வருகிறது