1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 2 ஏப்ரல் 2020 (11:38 IST)

காக்க வந்த அதிகாரிகளை கல்லால் அடித்து துரத்திய மக்கள்!

மத்திய பிரேதசத்தில் ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளை பொது மக்கள் அடித்து துரத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்தியாவில் தற்போது 1965 பேர் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நிலையில் டெல்லியில் நடந்த மத வழிபாட்டில் கலந்து கொண்டவர்களால் ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்து உள்ளது. 
 
இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 335 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது. 
 
இதனை அடுத்து கேரளாவில் 265 பேர்களுக்கும், தமிழகத்தில் 234 பேர்களுக்கும் கொரோனா பாதிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய பிரதேசத்தில் 99 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
இந்நிலையில் கொரோனா பரவலி தடுக்க நாடு முழுவதும் நலவாழ்வுத்துறை அதிகாரிகள் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அப்படி மத்திய பிரேதசத்தில் ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளை பொது மக்கள் கல்லால் அடித்தும், தகாத வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியும் துரத்திய சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.