1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 14 நவம்பர் 2019 (13:52 IST)

மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பாஸ்போர்ட் – மத்திய மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் கேள்வி

மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் பாஸ்போர்ட் தொடர்பாக மத்திய மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மூன்றாம் பாலினத்தவர்கள் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும்போது பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கான சான்றிதழ் கேட்கப்படுகிறது. இதை எதிர்த்து சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த சிவக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில் ‘ஒருவர் தனது பாலின அடையாளத்தை வெளிக்காட்டுவது என்பது அவரது தனிப்பட்ட சுதந்திரம் என்று உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே அந்த சான்றிதழ் கேட்பதை தடை செய்யவேண்டும்’ எனக் கோரினார்.

இதை விசாரித்த நீதிபதிகள் இது சம்மந்தமாக பதில் அளிக்க மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்