1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 21 டிசம்பர் 2019 (14:57 IST)

ஹைதரபாத் என்கவுண்ட்டர் – குற்றவாளிகள் உடல்கள் மீண்டும் பிரேத பரிசோதனை !

ஹைதரபாத் பெண் மருத்துவர் கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கில் என்கவுண்ட்டர் செய்யப்பட்ட குற்றவாளிகள் நான்கு பேரின் உடல்களையும் மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐதராபாத்தில் நள்ளிரவில் தனிமையில் இருந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா என்பவரை நான்கு பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்தது நாடு முழுவதும் பரபரப்பை உண்டாக்கியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீதான குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவர்களை ஹைதராபாத் போலீசார் என்கவுன்டர் செய்து சுட்டுக் கொன்றனர்.

இந்த என்கவுண்டருக்கு பொதுமக்கள் மத்தியில் பலத்த ஆதரவு கிடைத்த போதிலும் அறிவுஜீவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் காவல் துறையினருக்கு மிகுந்த எதிர்ப்பு உருவானது. இந்நிலையில் இந்த வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இதனால் கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படாமல் ஐதராபாத் மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து இப்போது இது தொடர்பான வழக்கு விசாரனையில் நீதிமன்றம் குற்றவாளிகளின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளது.