1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (18:18 IST)

சோலார் மின் தகடு மோசடி:: சரிதா நாயருக்கு 6 ஆண்டு சிறை

சோலார் மின் தகடு மோசடி:: சரிதா நாயருக்கு 6 ஆண்டு சிறை
சோலார் மின் தகடு மோசடி:: சரிதா நாயருக்கு 6 ஆண்டு சிறை
சோலார் மின் தகடு மோசடி வழக்கில் சரிதா நாயருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு சோலார் மின் தடை வழக்கு என்பது தெரிந்ததே. கோழிக்கோடு பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் அப்துல் மஜீத் என்பவரிடம் சரிதாநாயர் மற்றும் பிஜூ ராதாகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து சோலார் மின் தகடுகளை அமைத்து தருவதாக கூறி சுமார் 42 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது 
 
இந்த வழக்கு நீதிமன்றத்தில் கடந்த சில வருடங்களாக விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து சரிதா நாயருக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 40 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது 
 
மற்றொரு குற்றவாளியான பிஜு ராதாகிருஷ்ணன் கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதால் தீர்ப்பு அவருக்கான தண்டனை பின்னர் அறிவிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார். இந்த வழக்கில் சரிதா நாயருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது