வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: சனி, 4 நவம்பர் 2017 (14:38 IST)

திருமண வரவேற்புக்கு சென்ற சிறுமிகளை பாரில் நடனம் ஆட வைத்த தம்பதி கைது

திருமண வரவேற்பில் நிற்க அழகான சிறுமிகள் தேவை என்று ஆசை வார்த்தை காட்டி சிறுமிகளை அழைத்து சென்று பாரில் அரைகுறை ஆடையுடன் ஆட வைத்த கொடூர தம்பதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்



 
 
மேற்குவங்கத்தை ஏந்ர்த சுபிர்தாஸ்-சிம்ரன் தம்பதிகள் ஜெய்ப்பூரில் உள்ள பெற்றோர் ஒருவரிடம் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு உங்கள் மகள்களை அனுப்புங்கள், பணம் தருகிறோம், நிகழ்ச்சி முடிந்ததும் நாங்களே கொண்டு வந்துவிட்டுவிடுவோம் என்று ஆசை வார்த்தை காட்டி அழைத்து சென்றனர்.
 
ஆனால் திருமண வரவேற்புக்கு அழைத்து செல்லாமல் சிலிகுரியில் உள்ள அவர்களுடைய பாருக்கு அந்த சிறுமிகளை அழைத்து சென்று அரைகுறை ஆடையுடன் நடனம் ஆட வேண்டும் என்று பயமுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் மகள்களை அழைத்து சென்ற தம்பதியினர் மீது சந்தேகம் கொண்ட பெற்றோர்கள் காவல்துறையில் கொடுத்த புகாரை அடுத்து இரண்டு சிறுமிகளும் மீட்கப்பட்டதோடு, தம்பதிகளையும் போலீசார் கைது செய்தனர். இந்த இரண்டு சிறுமிகள் மட்டுமின்றி மேலும் சில சிறுமிகளும் அந்த பாரில் இருந்து மீட்கப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.