1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 22 மார்ச் 2020 (08:25 IST)

தனியார் லேப்களிலும் கொரோனா பரிசோதனைக்கு அனுமதி

இந்தியாவில் முதன்முறையாக கொரோனா பரிசோதனைகளுக்கு தனியார் லேப்களுக்கு அனுமதி வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
 
கொரோனா வைரஸ் உலக முழுவதும் அதிகப்படியான உயிர் பலிகளை கொடுத்து வருகிறது. இதுவரை 170 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,000-த்தை கடந்து உள்ளது. சீனாவில் தற்போது கொரோனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில், இத்தாலி மற்றும் ஈரான் போன்ற நாடுகள் அதிக பாதிப்பை சந்தித்து வருகின்றன.
 
இந்தியாவிலும் கொரோனா தனது கோரப்பிடியை காட்டத் துவங்கியுள்ளது. தற்போது இந்தியாவில் 315 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனா குறித்த பரிசோதனைகளுக்கு தனியார் லேப்களும் ஈடுபடலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு கட்டணமாக ரூ 4500க்கு மேல் இருக்க கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.