செப். வரை வீட்ல முடங்க வேண்டியது தானா? ஊரடங்கு பற்றிய ஹாட் அப்டேட்!!
இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தாலும் கடந்த ஒரு சில நாட்களில் மிக வேகமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது.
குறிப்பாக டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியவர்கள் தான் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2902 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிராவில் 423 பேர்களும், தமிழ்நாட்டில் 411 பேர்களும், டெல்லியில் 386 பேர்களும், கேரளாவில் 295 பேர்களும், ராஜஸ்தானில் 179 பேர்களும், உத்தரபிரதேசத்தில் 174 பேர்களும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே நாடு முழுவதும் கடந்த பத்து நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வரும் நிலையிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இந்தநிலையில், அமெரிக்க ஆய்வு நிறுவனமான பாஸ்டன், இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு ஜூன் மாத இறுதி - செப்டம்பர் மாத இரண்டாவது வாரத்துக்கு இடைப்பட்ட காலத்தில் நீக்கப்படலாம் என தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் ஜூன் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் தான் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என முன்னரே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.