1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 6 ஜனவரி 2021 (13:34 IST)

வேகமெடுக்கும் உருமாறிய கொரோனா : 100-ஐ நெருங்கும் பாதிப்பு!!

இந்தியா வந்தவர்களில் இதுவரை 71 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

 
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக மோசமாக பரவி லட்சக்கணக்கானவர்களை பலியாக்கி உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் இங்கிலாந்து நாட்டிலிருந்து பரவிவருகிறது.  
 
இதனை அடுத்து பல நாடுகள் இங்கிலாந்து நாட்டிலிருந்து வரும் விமானத்தை தடை செய்துள்ளன என்பதும் இங்கிலாந்து நாடும் தன்னுடைய நாட்டில் பரவி வரும் புதிய உருமாரிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் பிரிட்டனில் இருந்து திரும்பியவர்களில் மேலும் 13 பேருக்கு உருமாறிய கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் முலம் இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 58-லிருந்து 71 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.