1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 19 ஜனவரி 2022 (13:08 IST)

இறந்தவர்களின் உடலில் 9 நாட்கள் கொரோனா வைரஸ் உயிருடன் இருக்கும்: மத்திய அரசு

இறந்தவர்களின் உடல்களில் கொரோனா வைரஸ் 9 நாட்கள் உயிருடன் இருக்கும் என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதும் இதனால் கொரோனா வைரஸ் இந்தியாவில் கட்டுக்குள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த வழக்கு ஒன்றில் கொரோனா பாதித்து இறந்தவர்களின் உடலில் ஒன்பது நாட்கள் வரை கொரோனா வைரஸ் உயிருடன் இருக்கும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது 
 
இதனை அடுத்து இறந்தவர்களின் உடலிலிருந்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவும் பார்சி இன மக்களின் இறுதி சடங்குகள் ஆகியவற்றை சமன்படுத்தும் வகையில் புதிய வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது