ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 22 மார்ச் 2021 (08:41 IST)

கொரோனா தடுப்பூசி போட்டால் ரத்த தானம் செய்யக் கூடாது!? எத்தனை நாட்கள்! – ரத்தபரிமாற்ற கவுன்சில்!

கொரோனா காரணமாக மக்கள் பலர் தடுப்பூசி செலுத்தி கொண்டு வரும் நிலையில் ரத்த தானம் செய்வது குறித்த அறிவுறுத்தல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு ஒரு கோடியை தாண்டியுள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டால் இரண்டாவது டோஸ் எடுக்கும் வரை 28 நாட்கள் ரத்த தானம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்ட பிறகும் 28 நாட்கள் ரத்த தானம் செய்ய வேண்டாம் என தேசிய ரத்த பரிமாற்ற கவுன்சில் தெரிவித்துள்ளது. அதன்படி முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி மொத்தமாக 56 நாட்களுக்கு ரத்த தானம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.