திங்கள், 5 ஜனவரி 2026
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 22 மார்ச் 2021 (08:28 IST)

ஐபிஎல் தொடர் பரபரப்பு ஆரம்பம்… வீரர்கள் யாருக்கும் தடுப்பூசி இல்லை!

ஐபிஎல் தொடர் பரபரப்பு ஆரம்பம்… வீரர்கள் யாருக்கும் தடுப்பூசி இல்லை!
ஐபிஎல் தொடர் 2021 அடுத்தமாதம் தொடங்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஐபிஎல் தொடர் தாமதமாக ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் நடத்தப்பட்டன. அதையடுத்து இந்த ஆண்டு இந்தியாவிலேயே குறைந்த அளவிலான மைதானங்களில் நடத்தப்பட உள்ளன. ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர் கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு மேல் நடக்கிறது.

இந்நிலையில் இப்போது அதற்கான விதிமுறைகள் மற்றும் வீரர்களுக்கான கட்டுபாடுகள் மற்றும் பயோ பபுள் செயல்பாடுகள் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் வீரர்களுக்கு எந்த அணி நிர்வாகமும் கொரோனா தடுப்பூசி எதையும் போடக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணமாக ‘மத்திய அரசு விளையாட்டு வீரர்களுக்கென தனிப்பட்ட பிரிவு ஒதுக்கவில்லை என்பதால், தடுப்பூசி போடக்கூடாது.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.