Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜம்மு காஷ்மீரில் 3வது அலையா?

Written By Mahendran
Updated: புதன், 15 செப்டம்பர் 2021 (21:42 IST)
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு உயர்ந்து வருகிறது என்பதும் குறிப்பாக தமிழகத்தில் இன்று 1600ஐ தாண்டி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது
 
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் மட்டும் செப்டம்பர் 1 முதல் 14-ம் தேதி வரை 1,611 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 29.02 சதவிகிதத்திலிருந்து 45 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
 
மேலும் ஜம்மு-காஷ்மீர் சுகாதாரத் துறை புள்ளி விபரத்தின்படி ஆகஸ்ட் 1 முதல் 31 வரை 3,542 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்றும், ஸ்ரீநகரில் மட்டும் 1,028 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்றும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 
 

எல்லாம் காட்டு

சென்னையில் அமித்ஷா முன்னிலையில் தென்மாநில முதல்வர்கள் கூட்டம்.. காவிரி விவகாரம் பேசப்படுமா?

மருத்துவ சிகிச்சைக்கு கொல்கத்தா வந்த 8 வங்கதேசத்தினர் பலி.. என்ன நடந்தது?

உண்மைகளை உலகிற்கு சொல்லும் இதுவரை வெளிவராத உண்மைகள்.. புத்தகம் எழுதிய இளவரசி டயானாவின் சகோதரர்...

ஹோம் லோன், பர்சனல் லோன் வட்டி விகிதங்களில் திடீர் மாற்றம்.. RBI சொல்வது என்ன?

தவெக எம்.எல்.ஏக்கள் மன்னர் பரம்பரை அல்ல!.. உதயநிதி Vs ஆதவ் அர்ஜுனா மோதல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments