வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு கொரொனா கட்டுப்பாடுகள் தளர்வு..
இந்தியாவில் 3 வது கொரொனா அலை பரவி வருகிறது. சில வாரங்களாகத் தீவிரமாகப் பரவி வந்த கொரொனா தொற்று சில தினங்களாகக் குறைந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
இ ந்நிலையில் மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு பிப்ரவரி 14 முதல் கொரொனா கட்டுப்பாடுகள் தளர்வு அளித்துள்ளது.
அதில், 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் நீக்கப்பட்டுள்ளது. அதனால், 14 நாட்கள் தாங்களாகவே உடல் நிலையைக் கண்காணிக்க வேண்டும் எனவும், 72 மணி நேரத்திற்கு முன்பாக கொரொனா நெகட்டிவ் அல்லது 2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ் காண்பித்தால் போதும் எனத் தெரிவிக்கப்படுள்ளது.