கொரோனா இழப்பீடு பெற கால அவகாசம் நிர்ணயம்! – மத்திய அரசு அறிவிப்பு!
கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு அளிக்கப்படும் இழப்பீடை பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் இந்தியா முழுவதும் கொரோனா பெருந்தொற்று இந்தியா முழுவதும் பல கோடி மக்களை பாதித்துள்ளது. கொரோனா அலைகளால் பல லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு இழப்பீடு அறிவித்துள்ளது.
இந்த இழப்பீட்டை பெற கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 20க்கு முன்னர் கொரோனாவால் இறந்தவர்களுக்கான இழப்பீட்டை பெற 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.