நாட்டிலேயே கொரோனா இறப்பு விகிதம் கம்மியான நகரம் இதுதான்! வெளியான தகவல்!
நாட்டிலேயே கொரோனா இறப்பு விகிதம் பெங்களூவில் மட்டும்தான் குறைவு என்ற ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கிராமங்களை விட மக்கள் அடர்த்தி அதிகமாக இருக்கும் நகரங்களிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் நாட்டிலேயே பெங்களூருவில் கொரோனா இறப்பு விகிதம் மிகவும் குறைவு என சுகாதார துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
பெங்களூவில் கொரோனா பாதிக்கப்படுபவர்களில் இறப்பு விகிதம் 1.1 சதவிகிதமாக மட்டுமே உள்ளது.இந்தியாவின் மற்ற மெட்ரோ பாலிட்டன் நகரங்களை விட இந்த இறப்பு விகிதம் மிகவும் குறைவு என தெரிவித்துள்ளார்.