1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 22 ஜூலை 2022 (08:01 IST)

அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு கொரோனா தொற்று!

Joe Biden
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்களுக்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பாக விஐபிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டு உள்ளது 
இதனை அடுத்து அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்தப்பட்டு அதிபரின் பணிகளை கவனித்து வருகிறார் என்றும் மருத்துவர்கள் அவ்வப்போது அவருக்கு ஆலோசனை கூறி உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
அமெரிக்க அதிபருக்கு கொரோனா பாதிப்பு என்ற தகவல் அமெரிக்க மக்கள் மட்டுமின்றி உலக தலைவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.