வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 25 ஜூலை 2021 (15:25 IST)

துப்பாக்கியுடன் செல்பி எடுக்க ஆசை; பரிதாபமாக இறந்து புது மணப்பெண்!

உத்தர பிரதேசத்தில் துப்பாக்கியுடன் செல்பி எடுக்க முயன்ற புது மணப்பெண் குண்டு வெடித்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் ஹர்டோய் பகுதியை சேர்ந்த நகை வியாபாரி ராஜேஷ் குப்தா. இவருக்கும் ராதிகா என்ற பெண்ணுக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கணவர் வீட்டில் இருந்த துப்பாக்கியை வைத்து போட்டோ எடுக்க ராதிகா விரும்பியதாக கூறப்படுகிறது. அவ்வாறாக புகைப்படம் எடுக்கையில் தவறுதலாக துப்பாக்கி குண்டு வெடித்ததில் காயமடைந்த ராதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், ஆனால் மருத்துவமனை வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புது மணப்பெண் துப்பாக்கி குண்டால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.