தொடர்புடைய செய்திகள்
- 25 ஆண்டுகளுக்குப் பிறகு அரசியல் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அண்ணாத்த ரிலீஸ்!
- அஜித்துடன் நடிக்க ரெடியா இருக்கிறேன்… விஜய் சேதுபதி ஓபன் டாக்!
- ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் 2.0 அறிவிப்பு… ரோபோவுக்கு பதில் ஏலியன்!
- பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணிகள்… இரண்டு மாதங்களுக்கு ரயில் சேவை ரத்து!
- அமெரிக்கனாய் இருந்தாலும் என்னுள் இந்தியாதான் இருக்கிறது! – சுந்தர் பிச்சை பேச்சு!
32 ஆயிரமாக குறைந்த தினசரி பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா!
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை குறைந்து வரும் நிலையில் தினசரி பாதிப்புகள் 32 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 32,906 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,09,07,282 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 2020 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 4,10,784 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,00,63,720 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 4,32,778 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
