திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: செவ்வாய், 13 ஜூலை 2021 (10:37 IST)

25 ஆண்டுகளுக்குப் பிறகு அரசியல் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அண்ணாத்த ரிலீஸ்!

அண்ணாத்த படத்தின் வெற்றி எந்தளவுக்கு இருக்கும் என்ற பேச்சு இப்போதே எழுந்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவுக்கு மருத்துவ சோதனைகளுக்காக சென்று இந்தியா திரும்பியுள்ளார். இந்நிலையில் இன்று தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்று அறிவித்த பின் முதல் முறையாக மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்க உள்ளார் என்பதால் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் இதுபற்றி இன்று காலை அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பல விஷயங்களை கூறிய அவர் ‘நான் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேனா என்ற கேள்வியும் இருக்கிறது. அதுகுறித்தும் மக்கள் மன்ற நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்துவேன்’ எனக் கூறினார்.

பின்னர் மக்கள் மன்றம் கலைக்கப்பட்டு ரஜினி ரசிகர் மன்றங்களாக மட்டுமே செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது, இந்நிலையில் கடந்த 25 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியின் சூசக அரசியல் சச்சரவுகள் இல்லாமல் அண்ணாத்த திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. ரஜினி ரசிகர்கள் அரசியல் அறிவிப்பு குறித்த ஏமாற்றத்தில் இருக்கும் நிலையில் அண்ணாத்த திரைப்படம் என்ன விதமான வெற்றியை பெற்றுத்தரும் என்ற கருத்துகள் எழுந்துள்ளன.