1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona cases cross in india again increased

மீண்டும் 2 லட்சத்தை தாண்டிய தினசரி பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா!

India
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 4 லட்சத்தை தொட்டிருந்த நிலையில் தற்போது மெல்ல குறைந்து 3 லட்சத்திற்கும் கீழாக உள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது குறைய தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 2,08,921 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 2,71,57,795 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 4,157 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  3,11,388 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,43,50,816 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 24,95,591 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இந்தியா முழுவதும் 20,06,62,456 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
கரையை கடக்க தொடங்கியது யாஸ் புயல்! – அடித்து வெளுக்கும் மழை!