வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 22 செப்டம்பர் 2024 (18:16 IST)

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

Train Track

உத்தர பிரதேசத்தில் ரயில் தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டர் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

நாடு முழுவதும் இந்திய ரயில்வேயின் ரயில்கள் பல வழித்தடங்களிலும் பயணித்து வருகிறது. சமீபமாக ரயில்வே தண்டவாளங்களில் பாறாங்கல் உள்ளிட்ட ஆபத்தான பொருட்களை சிலர் வைப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  முக்கியமாக உத்தர பிரதேசத்தில் தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டர்கள் கிடக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

 

கடந்த செப்டம்பர் 9ம் தேதி கான்பூர் - காஸ்கஞ்ச் வழித்தடத்தில் சென்ற காளிந்தி எக்ஸ்பிரஸ் தண்டவாளத்தில் கிடந்த கேஸ் சிலிண்டரில் மோதியதில் வெடிச்சத்தம் ஏற்பட்டது உடனடியாக ரெயிலின் ஓட்டுனர் ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

 

இந்நிலையில் தற்போது கான்பூரில் இருந்து ப்ரயாக்ராஜ் நோக்கி செல்லும் சரக்கு ரயில் சென்றுக் கொண்டிருந்த தண்டவாளத்தில் 5 கிலோ மினி கேஸ் சிலிண்டர் ஒன்று கிடந்துள்ளது . உடனே சுதாரித்த ரயிலின் லோ பைலட் உடனே ரயிலை நிறுத்தினார். சரக்கு ரயில் கேஸ் சிலிண்டருக்கும் மிக அருகே வந்து நின்றது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

 

அதை தொடர்ந்து அந்த தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டரை வைத்தது யார் என்பது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Edit by Prasanth.K