தமிழக விவசாயிகளுடன் உரையாடிய பிரதமர் மோடி!
தமிழக விவசாயிகளிடம் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.
கடலூர் மாவட்டம் நெச்சிக்காடு பகுதியில் ஏராளமான விவசாயிகள் வெட்டிவேர் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில், புதிய உயர்ரக வெட்டிவேரை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நொச்சிகாடு புயல் பாதுகாப்பு மையத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் விவசாயிகளிடம் உரையாற்றினார்.
அப்போது, பிரதமர் மோடியிடம் விவசாயி தன்ராஜ், விவசாயத்தை மேம்படுத்திட மின்மோட்டார் இணைப்பதற்கு போதிய மின்வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு விவசாயத்தை மேம்படுத்திட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என பிரதமர் உறுதி அளித்தார்.