வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 12 நவம்பர் 2024 (12:13 IST)

முதல்வர் மீது அவதூறு கருத்து: இயக்குனர் ராம்கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு..!

ram gobal varma
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது அவதூறு கருத்தை பதிவு செய்த பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா மீது காவல்துறை வழக்கு பதிவு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆந்திராவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் கட்சிகள் இணைந்து ஆட்சியைப் பிடித்த நிலையில் இந்த ஆட்சி குறித்து சில விமர்சனங்கள் தற்போது எழுந்து வருகின்றன.

இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு அவரது குடும்பத்தினர் மற்றும் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் ஆகியோர்களின் ஆளுமைகளை இழிவுபடுத்தும் வகையில் புகைப்படங்களை மார்பிங் செய்து இயக்குனர் ராம்கோபால் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார்.

இதுகுறித்து தெலுங்கு தேச கட்சியினர் மாநிலத்தின் பல்வேறு காவல் துறையில் காவல் துறை அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில் ராம்கோபால் வர்மா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Edited by Siva