1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 8 டிசம்பர் 2023 (08:38 IST)

இந்தியா கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கழட்டிவிடப்படுமா? அசைக்க முடியாத இடத்தில் பாஜக..!

சமீபத்தில் இந்தியா கூட்டணி தொடங்கப்பட்ட நிலையில் அதில் காங்கிரஸ் பிரதான கட்சியாக இருந்தது. ஆனால் தற்போது காங்கிரஸின் நடவடிக்கை ஒரு சில மாநில கட்சிகளுக்கு பிடிக்கவில்லை என்பதால் இந்தியா கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கழட்டி விடப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது 
 
 இந்தியா கூட்டணியில் உள்ள ஒரே தேசிய கட்சி காங்கிரஸ் என்பதால் அக்கட்சி  இந்தியா கூட்டணியில் இணைவதால் பெரும் லாபம்  கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் இந்தியா கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் காங்கிரஸ் வளர்வதை விரும்பவில்லை 
 
குறிப்பாக 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கை இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது./எனவே காங்கிரஸ் கட்சியை இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேற்ற ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.  
 
இந்தியா கூட்டணியில் உள்ள திமுக மட்டுமே காங்கிரசுக்கு ஆதரவாக உள்ள நிலையில் மற்ற கட்சிகள் அதிருப்தியில் இருப்பதால்  இந்தியா கூட்டணி உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் வலுவான எதிர்க்கட்சி கூட்டணி இல்லாததால் பாஜக வரும் தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி என்றும் அக்கட்சி அசைக்க முடியாத இடத்தில் உள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Siva