அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் வந்தது ஏன்? காங்கிரஸ் எம்பியின் கண்டுபிடிப்பு

Last Modified வெள்ளி, 18 ஜனவரி 2019 (07:44 IST)
கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணியின் ஆட்சியை கலைக்க முயற்சி செய்ததால்தால் அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் வந்துள்ளதாக காங்கிரஸ் எம்பி ஒருவர் கூறியுள்ளார்.

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்து வரும் நிலையில் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் இந்த ஆபரேசன் தோல்வியில் முடிந்ததால் கர்நாடக அரசு தப்பியது.

இந்த நிலையில் கர்நாடக அரசை கலைக்க முயற்சித்ததால் தான் அமித்ஷாவிற்கு பன்றி காய்ச்சல் வந்ததாக காங்கிரஸ் எம்பி ஹரிபிரசாத் பொதுக்கூட்டம் ஒன்றில் கூறியுள்ளார். இவரது பேச்சும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


நேற்று கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் பாஜகவை கண்டித்து, காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டகாங்கிரஸ் எம்பி ஹரிபிரசாத் அதன்பின் பேசியதாவது: அமித்ஷா தன்னால் முடிந்தவரை கர்நாடக அரசை கவிழ்க்க முயற்சித்தார். அதனால்தான் அவருக்கு பன்றிக்காய்ச்சல் வந்துள்ளது. இந்த அரசை வேறு ஏதாவது செய்ய முயற்சித்தால் அவருக்கு பிற வியாதிகளும் வந்து சேரும்' என்று கூறினார்


amith sha
ஒருவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவை வைத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காங்கிரஸ் எம்பி ஹரிபிரசாத்துக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :