1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 10 மார்ச் 2022 (12:00 IST)

ஆட்சியில் இருந்த ஒரே மாநிலமும் போச்சு: 2024 தேர்தலை எப்படி எதிர்கொள்ள போகிறது காங்கிரஸ்?

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த ஒரே பெரிய மாநிலம் பஞ்சாப் என்று இருந்த நிலையில் அந்த மாநிலத்தில் ஆட்சியை இழந்த நிலையில் இனி 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை அக்கட்சி எப்படி சந்திக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது 
 
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டு பெரிய தேசியக் கட்சிகளையும் வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்கிறது
 
டெல்லியை அடுத்து இரண்டாவது மாநிலத்தையும் ஆம் ஆத்மி கட்சி என்ற ஒரு சிறிய மாநில கட்சி ஆட்சியை பிடித்துள்ள நிலையில் இந்தியா முழுவதும் இருக்கும் ஒரு தேசிய கட்சியான காங்கிரஸ் ஒரு பெரிய மாநிலத்தில் கூட ஆட்சியில் இல்லாமல் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த சரிவால் அந்தக் கட்சி எப்படி 2004ஆம் ஆண்டு வரும் பொதுத் தேர்தலை சந்திக்கப் போகிறது என்பது புரியவில்லை. ஏற்கனவே திமுக தவிர எந்த பெரிய கட்சியும் காங்கிரசுடன் கூட்டணி சேர தயாராக் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது