வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 10 நவம்பர் 2022 (08:12 IST)

இந்துவுக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு? சர்ச்சை கருத்து கூறிய காங்கிரஸ் பிரபலம்!

jorkali
இந்துவுக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு? சர்ச்சை கருத்து கூறிய காங்கிரஸ் பிரபலம்!
இந்துவுக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு என சர்ச்சை கருத்தை கூறிய காங்கிரஸ் பிரமுகர் ஒருவருக்கு கடும் கண்டனங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. 
 
கடந்த சில வருடங்களாகவே இந்து குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசுவது அரசியல்வாதிகளுக்கு வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது. அந்த வகையில் கர்நாடக மாநில காங்கிரஸ் பிரமுகர் ஜோர்கிகாளி என்பவர் இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார் 
 
அவர் இந்து மதம் என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது? என்று கேள்வி எழுப்பியதோடு அது பெர்சியா என்ற நாட்டில் இருந்து வந்தது என்றும் இந்து மதத்துக்கும் இந்தியாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் இந்து எப்படி உங்களுடைய ஒன்றாக இருக்கும் இந்து மக்கள் எப்படி நீங்கள் வாழ முடியும் என்றும் கேள்வி எழுப்பினார் 
 
மேலும் இந்து என்பதற்கு அர்த்தம் பயங்கரம் நிறைந்தது என்றும் மக்கள் ஏன் அதனை தூக்கி உயரமான பீடத்தில் வாழ்கின்றனர் என்றும் அவர் கேள்வி எழுப்பினார் 
 
அவருடைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்துக்களை புண்படுத்தும் வகையில் பேசியதாக பாஜக உள்பட பல்வேறு தரப்பினர் போர்க்கொடி உயர்த்தினார். இதனையடுத்து தனது பேச்சை திரும்ப பெறுகிறேன் என்று ஜோர்கிகாளி மன்னிப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்
 
Edited by Siva