1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 30 அக்டோபர் 2023 (13:01 IST)

தேர்தலுக்காக மக்களிடமிருந்து நிதி திரட்ட காங்கிரஸ் முடிவு?

வரும் 2024 ஆம் ஆண்டு  நடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலுக்காக இந்தியா முழுவதும் உள்ள  தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் தொடர்ந்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

ஏற்கனவே திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இந்தியா என்ற கூட்டணி அமைத்துள்ள நிலையில், பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில்  சில கட்சிகள் இணைந்துள்ளன.

இந்த நிலையில், தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் தொகுதிவாரியாக தங்கள் கட்சி நிர்வாகிகள், பூத் கமிட்டிகளை தேர்வு செய்து, தயார் படுத்தி வருகிறது.

இந்த நிலையில், வரும் 2024 ஆம் ஆண்டு  நாடாளுமன்றத் தேர்தலுக்காக மக்களிடமிருந்து நிதி திரட்ட மல்லிகார்ஜூன கார்கே தலைமையிலான காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

இதற்காக ஆன்லைன் வாயிலாக நிதிகோரும் திட்டத்தைக் காங்கிரஸ் கட்சி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வாய்ப்புள்ளாதாகத் தெரிகிறது.

கட்சியின் நிதி இருப்பைக் கணிசமாக  அதிகரிக்கும் முயற்சி இதுவென காங்கிரஸ் கூறியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

ஏற்கனவே தொடர்ந்து இருமுறை காங்கிரஸ் 2 முறை தொடர்ச்சியாக தோல்வியுற்றதால் அடுத்த தேர்தலில் பாஜக வீழ்த்த்த கூட்டணிகளுடன் சேர்ந்து திட்டம் வகுத்து வருகிறது.