1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 16 மார்ச் 2022 (08:17 IST)

சோனியா, ராகுல் விலக வேண்டும்: மூத்த தலைவர்கள் போர்க்கொடியால் காங்கிரஸில் பரபரப்பு

காங்கிரஸ் கட்சியில் இருந்து சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி விலக வேண்டும் என மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருவதால் காங்கிரஸ் கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
காங்கிரஸ் கட்சி கடந்த சில ஆண்டுகளாக தேர்தலில் தோல்வி அடைந்து வருகிறது இதில் நடந்த 5 மாநில தேர்தலில் ஒரு மாநிலத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பதும் குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் மூன்று தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் காங்கிரஸ் செயற்குழு சமீபத்தில் கூடியபோது சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராக நீடிப்பார் என ஒரு சில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கூறினாலும் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலக வேண்டும் என மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.