1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (12:58 IST)

நாட்டிலேயே முதல் மாநிலம்.. உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் தாக்கல்..!

நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரகாண்ட் சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பொது சிவில் சட்டத்தை இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசுக்கு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. முதல் கட்டமாக பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த சட்டம் இயற்றப்படும் என்று கூறப்பட்டது. 
 
தமிழகம் உள்பட ஒரு சில மாநிலங்களில் முதல் சிவில் சட்டத்தை அமல்படுத்த முடியாது என்று கூறப்பட்டிருக்கும் நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் மாநில முதல்வர் ஷ்கர் சிங் தாமி அவர்கள் பொது சிவில் சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். 
இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் ஆளுங்கட்சிக்கு போதுமான எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதால் இந்த சட்டம் உத்தரகாண்ட் மாநிலத்தில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
உத்தரகாண்ட் மாநிலத்தை அடுத்து வேறு எந்தெந்த மாநிலங்களில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran