1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 11 மார்ச் 2024 (12:37 IST)

ஒரு தடவை இங்க வாங்க.. மணிப்பூரை காப்பாத்துங்க! – பிரதமர் மோடிக்கு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த குத்துச்சண்டை சாம்பியன்!

chungreng koren
மணிப்பூரை சேர்ந்த மல்யுத்த வீரர் டெல்லியில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் வென்றபோது பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்த வீடியோ வைரலாகியுள்ளது.



மேட்ரிக்ஸ் ஃபைட் நைட் போட்டிகள் டெல்லியில் நடைபெற்று வந்த நிலையில் அதில் முகமது ஃபர்காதை எதிர்த்து போட்டியிட்ட மணிப்பூர் வீரர் சுங்ரெங் கொரென் வெற்றி பெற்று பதக்கத்தை வென்றார். தி இண்டியன் ரைனோ என அழைக்கப்படும் சுங்ரெங் கொரென் தான் வெற்றி பெற்ற பிறகு வீடியோ ஒன்றை பேசி வெளியிட்டார்.

அதில் பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்து பேசிய அவர் “மணிப்பூரில் சுமார் ஒரு வருடக்காலமாக தொடர்ந்து வன்முறை நீடித்து வரூகிறது. மக்கள் பலர் செத்து மடிகின்றனர். பலர் நிவாரண முகாம்கள் சரியான உணவு, குடிநீர் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். குழந்தைகள் கல்வியை இழந்துள்ளனர். அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. தயவுசெய்து ஒருமுறை மணிப்பூருக்கு வாருங்கள். மணிப்பூரின் அமைதியை மீட்டெடுங்கள்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

Edit by Prasanth.K