1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 19 ஜனவரி 2023 (12:07 IST)

19 வயது கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞர்.. காதல் விவகாரமா?

murdered
பெங்களூரைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியை 26 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. 
 
பெங்களூரை சேர்ந்த மது சந்திரா என்பவர் கல்லூரி மாணவி ராஷி என்பவரிடம் கடந்த சில நாட்களாக பழகி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறும் நிலையில் திடீரென ராஷி தனது காதலை முறித்துக் கொண்டதாக தெரிகிறது.
 
இதனால் அதிர்ச்சி அடைந்த மதுசந்தரா ராஷி இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். அப்போது ஒரு கட்டத்தில் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஷியை சரமாரியாக குத்தினார்.
 
இதனால் வயிற்றில் பலத்த காயம் அடைந்த ராஷி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக இருந்த மது சந்திராவை நேற்று காலை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
 
Edited by Mahendran