செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 29 பிப்ரவரி 2024 (13:22 IST)

பார்ட்டியில் ஏற்பட்ட தகராறு.. கல்லூரி மாணவனை கொலை செய்து புதைத்த நண்பர்கள்..!

பார்ட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடந்த தகராறில் மாணவர் ஒருவரை அவரது நண்பர்களை கொலை செய்து புதைத்த சம்பவம் புதுடெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
டெல்லி அருகே நொய்டாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் யாஷ் மிட்டல் என்பவர் படித்து வந்த நிலையில் அவரை திடீரென காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் யாஷ் மிட்டலை கடத்தி வைத்திருப்பதாகவும் 6 கோடி ரூபாய் பணம் தந்தால் விடுவிப்பதாகவும் மர்மநபர் மெசேஜ் அனுப்பிய நிலையில் இது குறித்து அவருடைய பெற்றோர் புகார் அளித்தனர் 
 
இதனை அடுத்து மெசேஜ் வந்த செல்போன் எண்ணை ஆய்வு செய்ய ஆய்வு செய்தபோது யாஷ் மிட்டலின் நண்பருடைய எண் என்று தெரியவந்தது. இதை அடுத்து அந்த நபரை பிடித்து விசாரித்த போது யாஷ் மிட்டலை கொலை செய்து புதைத்து விட்டதாக வாக்குமூலம் கொடுத்தது அதிர்ச்சி அடைய செய்தது
 
பல்கலைக்கழகத்திலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு இடத்தில் வயல்வெளியில் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததாகவும், அப்போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறைஅடுத்து யாஷ் மிட்டலை அவரது நண்பர்கள் மூன்று பேர் சேர்ந்து அடித்து கொலை செய்து அங்கேயே புதைத்து விட்டதாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து இந்த கொலைக்கு சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மேற்கொண்டு விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran