கல்லூரி மாணவனை கடத்தி மர்ம உறுப்பை வெட்டிய திருநங்கைகள் : அதிர்ச்சி தகவல்

கல்லூரி மாணவனை கடத்தி மர்ம உறுப்பை வெட்டிய திருநங்கைகள் : அதிர்ச்சி தகவல்


Murugan| Last Modified செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (12:11 IST)
கல்லூரி மாணவன் ஒருவரை கடத்தி அவரின் மர்ம உறுப்பை வெட்டி சித்ரவதை செய்த 4 திருநங்கைகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

 
பெங்களூரில் புலிகேசி நகர் அருகே வசித்து வரும் ஒரு கல்லூரி மாணவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போனார். அவர் எங்கு தேடியும் கிடைக்காததால், அவரின் பெற்றோர்கள் புலிகேசி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசாரும் அவரை தேடி வந்தனர். 
 
இந்நிலையில் சிக்பள்ளாப்புரில் உள்ள ஒரு இடத்தில், அவரை திருநங்கைகள் கடத்தி வைத்துள்ளனர் என்ற தகவல் போலீசாருக்கு வந்துள்ளது. எனவே அங்கு சென்ற போலீசார் அவரை மீட்டுள்ளனர். ஆனால் அங்கிருந்த திருநங்கைகள் மாயமாகி விட்டனர்.
 
அதன்பின் அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அவரை கடத்திய திருநங்கைகள், அங்கு ஒரு அறையில் அவரை அடைத்துவைத்து, அவரின் மர்ம உறுப்பை வெட்டியுள்ளனர். மேலும், எண்ணெய் உள்ளிட்ட திரவங்களை சூடாக்கி அவரின் மர்ம உறுப்பை வெட்டிய இடத்தில் உற்றி சித்ரவதை செய்துள்ளனர். மேலும், அவரை கழிவறை சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபடுத்தியுள்ளனர். தற்போது அந்த வாலிபருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
 
இதையடுத்து, அந்த திருநங்கைகளை தேடிக் கண்டுபிடிக்கும் வேலையில் போலீசார் தீவிரமாக இறங்கினர். தனிப்படை அமைக்கப்பட்டு வலை விரித்து தேடியதில், அந்த திருநங்கைகளுடன், அர்ச்சகர் துளசியப்பன் என்பவரும் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. 
போலீசார் தேடியதில், ஒருவரின் வீட்டில் பதுங்கியிருந்த துளசியப்பன் மற்றும் அந்த 4 திருநங்கைகளும் போலீசாரிடம் பிடிபட்டனர். விசாரணையில் அந்த மாணவரை கடத்தி, திருநங்கையாக மாற்றும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதுபோல், இன்னும் சில சிறுவர்களை கடத்தி திருநங்கையாக மாற்றியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக இன்னும் சிலரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :