யுபிஎஸ்சி சிவில் சர்வீஸின் 2020 ஆம் ஆண்டுக்கான நேர்முகத் தேர்வு தேதி!
2020 ஆம் ஆண்டுக்கான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் ஆகிய பணிகளுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேர்வின் ஒரு பகுதியான நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது
ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் ஐபிஎஸ், ஐ.ஏ.எஸ், ஐஎஃப்எஸ் ஆகிய யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இந்த நேர்முகத் தேர்வுக்கு கொரோனா பரவல் காரணமாக திடீரென நிறுத்தப்பட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது
இந்த நிலையில் மீண்டும் தற்போது ஆகஸ்ட் 2 முதல் இந்த நேர்முகத் தேர்வு தொடங்கும் என்றும் இதற்கான அழைப்பு upsc.gov.in upsconline.in ஆகிய இணையதளங்களில் விரைவில் பதிவு செய்யப்படும் என்றும் யுபிஎஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே இந்த தேர்வுக்கு அனைவரும் தயாராகி கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது