வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வியாழன், 10 நவம்பர் 2016 (16:54 IST)

ரூபாய் நோட்டு விவகாரம் : சினிமா காட்சிகள், படப்பிடிப்புகள் ரத்து

ரூபாய் நோட்டு விவகாரம் : சினிமா காட்சிகள், படப்பிடிப்புகள் ரத்து

தற்போதுள்ள ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்துவிட்ட நிலையில், அதன் பாதிப்பு பல்வேறு துறையினரை பாதித்துள்ளது.


 

 
பொதுமக்கள் ஏராளமானோர் தங்கள் கைகளில் பணத்தை வைத்துக் கொண்டு, செலவழிக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். ஒரு பக்கம் பல்வேறு துறையினரும் தங்கள் வேலையாட்களுக்கு பணத்தை கொடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
 
இந்த விவகாரம் சினிமா துறையினரையும் பாதித்துள்ளது. ஏற்கனவே தியேட்டர் பக்கம் கூட்டம் இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நிறைய படப்பிடிப்புகளும் பாதித்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
 
படப்பிடிப்பில் கலந்து கொள்ளும்,  தொழிலாளர்களுக்கு, தினக் கூலிதான் வழங்கப்படும். அதற்கு கண்டிப்பாக 100 ரூபாய் நோட்டுகள் வேண்டும். மேலும், செலவுகளை சமாளிக்க பணம் வேண்டும். ஆனால் இருப்பதோ செல்லாத 500 மற்றும் 1000 நோட்டுகள்தான். 
 
எனவே பெரும்பாலன படப்பிடிப்புகள் நடைபெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், நாளை வெளியாகவிருந்த பல புதிய படங்களை, அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்திருக்கிறது தென்னிந்திய சினிமா உலகம்.