1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 1 ஜூலை 2017 (17:54 IST)

இந்தியாவில் அமல்படுத்தி இருப்பது ஜிஎஸ்டியா? சிதம்பரம் காட்டம்!!

இந்தியாவில் இன்று முதல் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சிதம்பரம் இது ஜிஎஸ்டி வரி விதிப்பே கிடையாது என காட்டமாக கூறியுள்ளார்.


 
 
ஜிஎஸ்டி வரியை 2006 ஆம் ஆண்டே அமல்படுத்த காங்கிரஸால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது, அப்போது பாஜக அதற்கு முட்டுக்கட்டை போட்டது. 
 
குறிப்பாக குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்கள் ஜிஎஸ்டிக்கு வலிமையான எதிர்ப்புகள் வந்தது. ஆனால் இன்று அதே பாஐக இது தனது சாதனை என்று கூறிக் கொள்கிறது என சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
 
மேலும், அவர் கூறியதாவது, ஜிஎஸ்டி என்பது ஒரே வரியை விதிப்பது தான். இந்த வரி விகிதம் 15% தாண்டக் கூடாது. ஆனால் பாஜக 18% வரியை விதித்துள்ளது. 
 
ஜிஎஸ்டி என்பது ஒரே வரி முறை என்று கூறி விட்டு 0%, 5%, 12%, 18%, 25%, 40% என பல வரி விகிதங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆக இது எப்படி ஒரே வரியாக இருக்கும் என்றும் இந்தியாவில் தற்போது அமலுக்கு வந்திருப்பது ஜிஎஸ்டி வரிதானா? என கேள்வி எழுப்பினார்.