திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 13 ஜனவரி 2024 (14:14 IST)

சென்னை - அயோத்தி, சென்னை - லட்சத்தீவு விமான சேவை தொடக்கம்: சூப்பர் தகவல்..!

Flight
சென்னையிலிருந்து அயோத்திக்கும் சென்னையிலிருந்து லட்சத்தீவுக்கும் புதிய விமான சேவை தொடங்க இருப்பதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் திறக்க உள்ளதை அடுத்து நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் இருந்து அயோத்திக்கு விமான சேவை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் சென்னையில் இருந்து அடுத்த வாரம் முதல் அயோத்திக்கு விமான சேவை தொடங்க இருப்பதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த விமான சேவையை ராமர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதேபோல் சென்னையில் இருந்து லட்சத்தீவு பகுதிகளுக்கும் விமான சேவை தொடங்கப்படும் என்றும் லட்சத்தீவில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் இந்த விமான சேவை தொடங்கப்படுவதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran