புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 21 நவம்பர் 2019 (17:39 IST)

விக்ரம் லேண்டர் சொதப்பியது ஏன்? வெளிவந்த உண்மை!

திட்டமிடப்பட்டதைவிட விக்ரம் லேண்டரின் வேகம் குறைந்ததே, கடின தரையிறக்கத்துக்கு காரணம் என மத்திய இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார். 
 
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்தரயான் 2, நிலவின் மேற்பகுதியில் விக்ரம் லேண்டரை தரையிறக்க முயற்சித்த போது நிலவின் 2.1 கி.மீ. தொலைவில் சிக்னல் துண்டிக்கப்பட்டது.  
 
இதன் பின்னர் ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டர் எந்த சேதமும் இல்லாமல் நிலவின் மேற்பகுதியில் சாய்ந்து கிடக்கிறது என கண்டறிந்தனர். பின்பு விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள பெரும் முயற்சியை மேற்கொண்டும் அவை எதுவும் பலனளிக்கவில்லை. 
 
இந்நிலையில், விக்ரம் லேண்டர் தரையிறங்குவதில் சிக்கலானது ஏன் என மக்களவையில் மத்திய இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, முதற்கட்டமாக நிலவின் மேற்பரப்பிலிருந்து 30 கிமீ உயரம் வரை விநாடிக்கு 1,683 மீ என்ற வேகத்தில் விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட்டது. 
 
இந்த வேகமானது 7.4 கிமீ உயரத்திற்கு சென்றதும், விநாடிக்கு 146 மீட்டர் என்ற அளவுக்கு குறைந்து விட்டதாகவும், திட்டமிடப்பட்டதைவிட வேகம் குறைந்ததே இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பகுதியிலிருந்து 500 மீ கடினமாக தரையிறங்கியதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.