1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By

சந்திராயன் 2 எடுத்த இரண்டாவது புகைப்படம்: நிலவின் மர்மம் விலகுகிறதா?

சந்திராயன் 2 விண்கலம் சமீபத்தில் முதல் புகைப்படத்தை அனுப்பிய நிலையில் தற்போது அது எடுத்த இரண்டாவது புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது
 
நிலவில் இருந்து சுமார் 4375 கி.மீ உயரத்தில் இருந்து எடுத்த புகைப்படங்கள் நிலவில் இருக்கும் பள்ளங்களை விரிவாக காட்டுகிறதால் சந்திரனின் பல மர்மங்கள் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
நிலவின் மேற்பரப்பில் காணப்படும் இந்த பள்ளங்கள் விண்வெளியில் இருந்து விழுந்த விண்கற்கள் அல்லது வேற்று கிரக பொருட்கள் அல்லது செயற்கைக்கோள்கள் செயலிழந்து நிலவின் மீது விழும்போது விழுந்ததால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் ஊகித்து வருகின்றனர்.
 
மேலும் செப்டம்பர் 2ஆம் தேதி சந்திராயன் 2 விண்கலத்தில் உள்ள லேண்டர் பிரிந்து சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் இறங்கும்போது இன்னும் பல மர்மங்களுக்கு விடை கிடைக்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
சந்திரனின் தெற்கு துருவப் பகுதி பல பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளி படாத பிரதேசமாக இருந்து வரும் நிலையில் சந்திராயன் 2 மூலம் செய்யப்படும் ஆய்வுகளின் முடிவுகள் பல ஆச்சரியங்களை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது