1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 8 ஏப்ரல் 2026 (12:47 IST)

இனிமேல் நம்ம இஷ்டத்துக்கு நியூஸ் எழுத முடியாது: கண்டென்ட் கிரியேட்டர்களுக்கு கட்டுப்பாடு? மத்திய அரசு அதிரடி

இனிமேல் நம்ம இஷ்டத்துக்கு நியூஸ் எழுத முடியாது:  கண்டென்ட் கிரியேட்டர்களுக்கு கட்டுப்பாடு? மத்திய அரசு அதிரடி
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 2021-ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப விதிகளில் முக்கியமான திருத்தங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. 
 
ஆன்லைன் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் இந்த வரைவு திருத்தங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம், பதிவு செய்யப்பட்ட செய்தி நிறுவனங்கள் மட்டுமின்றி, தனிப்பட்ட டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்குநர்களும் இந்த விதிகளின் கீழ் கொண்டுவரப்பட உள்ளனர். இந்த திருத்தங்கள் குறித்து ஏப்ரல் 14-ஆம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
இந்த மாற்றங்கள் குறித்து விளக்கிய அமைச்சக செயலாளர் எஸ்.கிருஷ்ணன், அரசுக்கு எதிரான கருத்துக்களை முடக்குவதற்காக இந்த விதிகள் கொண்டுவரப்படவில்லை என்று தெளிவுபடுத்தினார். போலி செய்திகள் மற்றும் 'டீப்ஃபேக்' தொழில்நுட்பத்தால் ஏற்படும் ஆபத்துகளை கட்டுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் என்றார். 
 
புதிய விதிகளின்படி, குறிப்பிட்ட செய்தி உள்ளடக்கங்களை கண்காணிக்கும் அதிகாரம் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கும் பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது. 
 
தவறான செய்தியாக இருந்தால் உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி உள்ளடக்கங்கள் நீக்கப்படும் என்று அரசு உறுதியளித்துள்ளது.
 
Edited by Siva