1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 10 ஏப்ரல் 2024 (07:59 IST)

மொத்த வருமானமே ரூ.680 தானா? மத்திய அமைச்சர் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு..!

ஒரு வருடத்தின் மொத்த வருமானமே ரூபாய் 680 என மத்திய அமைச்சர் தனது வேட்புமனுவில் குறிப்பிட்ட உள்ள நிலையில் இது குறித்து விசாரணை செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா முழுவதும் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து வேட்புமனு தாக்கல், பிரச்சாரம் உட்பட பல்வேறு அரசியல் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
அந்த வகையில் பாஜக சார்பில் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது வேட்பு மனுவில் கடந்த 2021 - 22 ஆம் ஆண்டில் தனது மொத்த வருமானமே ரூபாய் 680 தான் என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஒரு மத்திய அமைச்சருக்கு மாதம் லட்சக்கணக்கில் சம்பளம் வழங்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் ஆண்டு வருமானமே அவர் ரூ.680 என குறிப்பிட்டுள்ளது தேர்தல் அதிகாரிகளுக்கு சந்தேகத்தை எழுப்பி உள்ள நிலையில் இது குறித்து விசாரணை செய்ய நேரடி வரிகள் ஆணையத்திற்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Siva