புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 4 மார்ச் 2019 (14:14 IST)

சிறுநீரை சேமியுங்கள்!!! மக்களுக்கு மத்திய அமைச்சர் வேண்டுகோள்!!

சிறுநீரை சேமித்தால் யூரியா இறக்குமதியை நிறுத்திவிடலாம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 
 
பாஜக அமைச்சர்கள் சர்ச்சையான கருத்துக்களை கூறி சிக்கலில் சிக்குவதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர். அதில் முக்கிய பங்கை பகிப்பவர் அமைச்சர் நிதின் கட்கரி. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது மக்களின் வங்கிக்கணக்கில் 15 லட்சம் வழங்குவோம் என பாஜக சும்மா சொன்னது என கூறி கடும் சர்ச்சையைக் கிளப்பினார். 
 
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் சிறுநீரில் உள்ள அமோனியம் சல்ஃபேட் மற்றும் நைட்ரஜனிலிருந்து யூரியா தயாரிக்கலாம் என்றும் கூறினார். நாடு முழுவதும் சிறுநீரை சேமித்து வைத்தால் யூரியா இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமே இல்லை என கூறினார். ஆகவே மக்கள் சிறுநீரை சேமித்து யூரியா இறக்குமதியை தடுக்க வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.