இந்தியாவில் குறைந்து வரும் முகக்கவசம் பயன்பாடு! – மத்திய அரசு எச்சரிக்கை!
இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மக்களிடையே முகக்கவசம் பயன்படுத்துவது குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தாக்கம் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தீவிரமடைந்திருந்த நிலையில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் கடந்த சில வாரங்களில் கொரோனா தடுப்பூசி போடுவது அதிகரித்துள்ளதால் பாதிப்புகள் குறைந்து வருகின்றன. இதனால் மாநில அரசுகள் தளர்வுகளையும் மெல்ல அறிவித்து வருகின்றன.
ஆனால் அதேசமயம் மக்களிடையே மாஸ்க் அணியும் பழக்கமும் குறைந்து வருகிறது. குறிப்பாக பொது இடங்களில் பெரும்பாலான மக்கள் மாஸ்க் அணியாமல் இருந்து வருகின்றனர். இதுகுறித்து மத்திய அரசின் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள தகவலில் பொதுமக்களிடையே மாஸ்க் அணியும் பழக்கம் கடந்த 2வது அலைக்கு முன்னதாக இருந்த அளவு குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முகக்கவசம் அணிதலும், தடுப்பூசி போடுதலும் அவசியம் என நிதி ஆயோக் எச்சரித்துள்ளது.