1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 29 ஜனவரி 2024 (07:10 IST)

இடஒதுக்கீடு விவகாரம்: யுஜிசி அறிவிப்பிற்கு மத்திய அரசு விளக்கம்

உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவில் இருந்து போதிய விண்ணப்பங்கள் இல்லாத பட்சத்தில் அதைப் பொதுப்பிரிவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என யுஜிசி தெரிவித்த நிலையில், அதற்கு மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
 
சமீபத்தில் யுஜிசி வெளியிட்ட அறிவிப்பில் இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் புதிய இட ஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இதுகுறித்து பொதுமக்கள் கருத்துகளைக் கூறலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
 
இந்த நிலையில் யுஜியி அறிவித்த புதிய வழிகாட்டுதல்கள் கீழ் உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவில் உள்ள பதவிகளில் போதிய விண்ணப்பங்கள் இல்லை என்றால் இட ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் காலியாக இருந்தால், அதைப் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டது.
 
ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மத்திய அரசு இதுகுறித்து விளக்கமளித்துள்ளது. இந்த விளக்கத்தில் எஸ்சி, எஸ்டி, ஒபிசி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட எந்த காலியிடமும் பொதுப் பிரிவினருக்கு மாற்றப்படாது என்றும்,  எந்த இட ஒதுக்கீடு பதவியும் பாதிக்கப்படாது என்றும் 2019 விதிகளின்படியே அனைத்து காலியிடங்களும் நிச்சயம் நிரப்பப்படும் எனவும்  கல்வி அமைச்சகம்  தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்துள்ளது.  
 
Edited by Siva