முதல் டோஸ், 2வது டோஸ், வெவ்வேறு நிறுவன தடுப்பூசியை போடலாமா?
முதல் டோஸ், மற்றும் இரண்டாவது டோஸ் என இரண்டு வெவ்வேறு நிறுவனத்தின் தடுப்பூசிகளை போடலாமா என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது
சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல் டோஸ், ஒரு நிறுவனத்தின் தடுப்பூசியும் இரண்டாவது டோஸ் ஒரு நிறுவனத்தின் தடுப்பூசியும் 20 பேர்களுக்கு போடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் அவ்வாறு மாறி மாறி இரண்டு டோஸ்கள் போடப்பட்டதால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டது
இந்த நிலையில் இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. முதல் டோஸ் ஒரு நிறுவனத்தின் தடுப்பூசியும் இரண்டாவது டோஸ், இன்னொரு நிறுவனத்தின் தடுப்பூசி போடுவதால் எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படாது என்றும் அவ்வாறு போட்டவர்கள் பயப்பட தேவையில்லை என்றும் கூறியுள்ளது
இருப்பினும் பொதுமக்கள் ஒரே நிறுவனத்த்ஹின் முதல் டோஸ் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடுவதில் மட்டுமே ஆர்வத்துடன் உள்ளார்கள் என்பதும் மாற்றிப்போட்டு ரிஸ்க் எடுக்க யாரும் தயாராக இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது