செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 26 மார்ச் 2021 (07:15 IST)

இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி: தொடரை வெல்லுமா இந்தியா?

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று புனே மைதானத்தில் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. ஏற்கனவே நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நிலையில் இன்று இரண்டாவது போட்டி துவங்க உள்ளது 
 
பகலிரவு போட்டியாக தொடங்கவிருக்கும் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை வென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்திய அணி வெற்றிக்காக தீவிரமாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
அதேபோல் தொடரை இழந்து விடக்கூடாது என்பதற்காக இங்கிலாந்து அணியும் போராடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 தொடரை இந்திய அணி வென்றுள்ள நிலையில் ஒருநாள் தொடரையும் இந்திய அணி வென்றால் ஒட்டுமொத்த வெற்றி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் காயம் காரணமாக விலகி உள்ளதை அடுத்து அவருக்கு பதிலாக யார் அணியில் இணைக்கப்படுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்